முருகன், வசந்தி தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். மூத்த மகன் சிவாவுக்கு தன் தங்கை மகளான யாழினியைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் முருகன். சிவா ,யாழினி நிச்சயதார்த்தம் உற்றார்,உறவினர்கள் சூழ வெகுசிறப்பாக பெண் வீட்டில் நடைபெற்றது. அடுத்த மாதமே திருமணம் செய்ய முடிவெடுத்தனர். சிவாவும் யாழினியும் கல்யாணக் கனவில் இருந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடும்பத்தில் முதல் திருமணம் என்பதால் முருகன், வசந்தி இருவரும் உறவினர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழைத் தந்தனர். முருகன் ,தான் சோர்வாக இருப்பதை உணர்ந்தார். அதனால்அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பிதழைக் கொடுத்து விட்டு விடுப்புச் சொல்லிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றார்...