Skip to main content

Posts

மாற்றங்களுடன் அம்மா.....

                       அம்மா நான் கிளம்புறேன் லேட்டாயிடுச்சு, என்றுச் சொல்லிவிட்டு தன் அலுவலகத்துக்குக் கிளம்பினான் அருண். 25 வயது இளைஞன் அருண். அப்பா சுந்தரம்,அம்மா பெயர் ராதிகா. வீட்டிற்கு ஒரே பையன் அருண். அதிக செல்லமாக வளர்க்கப்பட்டான்.அருணுக்கு பெண்பார்க்கும் வேலையை ஆரம்பித்தனர், அருணின் பெற்றோர். அருணுக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளவில்லை என்பதால் சொந்த ஊரான மதுரையை விட்டு சென்னையில் வாடகைக்குக் குடியேறினர்.                                                                          அருணின் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் ராதா. அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.பெரிய பையனுக்கு ஆறு வயது ,இரண்டாவது மகளுக்கு வயது நான்கு.ராதாவின் கணவர் வீட்டிற்கு அருகில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். ராதாவும் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வருகிறாள்....

விதைகள் பரவுதல் வகைகள்/Vidhaigal paravuthal/Seed dispersal in Tamil

முடிவு!!!!!

                             முருகன், வசந்தி தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். மூத்த மகன் சிவாவுக்கு தன் தங்கை மகளான  யாழினியைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் முருகன். சிவா ,யாழினி நிச்சயதார்த்தம் உற்றார்,உறவினர்கள் சூழ வெகுசிறப்பாக பெண் வீட்டில் நடைபெற்றது. அடுத்த மாதமே திருமணம் செய்ய முடிவெடுத்தனர்.                                  சிவாவும் யாழினியும் கல்யாணக் கனவில் இருந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடும்பத்தில் முதல் திருமணம் என்பதால் முருகன், வசந்தி இருவரும் உறவினர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழைத் தந்தனர்.                                     முருகன் ,தான் சோர்வாக இருப்பதை உணர்ந்தார். அதனால்அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பிதழைக் கொடுத்து விட்டு விடுப்புச் சொல்லிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றார்...