முருகன், வசந்தி தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருந்தனர். மூத்த மகன் சிவாவுக்கு தன் தங்கை மகளான யாழினியைத் திருமணம் செய்ய முடிவெடுத்தார் முருகன். சிவா ,யாழினி நிச்சயதார்த்தம் உற்றார்,உறவினர்கள் சூழ வெகுசிறப்பாக பெண் வீட்டில் நடைபெற்றது. அடுத்த மாதமே திருமணம் செய்ய முடிவெடுத்தனர். சிவாவும் யாழினியும் கல்யாணக் கனவில் இருந்தனர். திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. குடும்பத்தில் முதல் திருமணம் என்பதால் முருகன், வசந்தி இருவரும் உறவினர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழைத் தந்தனர். முருகன் ,தான் சோர்வாக இருப்பதை உணர்ந்தார். அதனால்அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பிதழைக் கொடுத்து விட்டு விடுப்புச் சொல்லிவிட்டு வருவதாகச் சொல்லிச் சென்றார். முருகன் வரவில்லை. அவரது அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தொலைபேசி அழைப்பு வந்தது. முருகனின் நண்பர் தான் அழைத்திருந்தார். அதனால் வசந்தி மகிழ்ச்சியுடன் சொல்லுங்கண்ணே, என்றார். ஆனால் அவரோ வருத்தத்துடன், முருகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து இருப்பதாகக் கூறினார். அதிர்ந்துபோன வசந்தி தன் மகன்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். அவர்கள் மருத்துவமனையைச் சென்றடையும் முன் முருகன் அவர்களை விட்டுச் சென்றுவிட்டார். ஆம்புலன்சில் அவரது உடல் எடுத்து வரப்பட்டது.அந்த அதிர்ச்சியில் இருந்து மொத்தக் குடும்பமும் மீள்வதற்குள், வீட்டிற்கு வந்த வசந்தி,குளியலறையில் வைத்திருந்த ஆசிட் பாட்டிலை எடுத்துக் கையில் வைத்துக் கொண்டு,எக்காரணம் கொண்டும் சிவாவின் திருமணத்தை நிறுத்தவோ,தள்ளி வைக்கவோ கூடாது எனச் சொல்லிவிட்டு அனைவர் முன்னிலையிலும் ஆசிடைக் குடித்து விட்டார். செய்வதறியாது தவித்த மூவரும்,முருகனை ஏற்றி வந்த அதே ஆம்புலன்சில் இப்பொழுது வசந்தியை ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். போகும் வழியிலேயே வசந்தி இறந்துவிட்டார். வசந்தியின் ஆசைப்படி சிவா,யாழினி திருமணம் நிச்சயம் செய்த தேதியில் எளிமையாக நடைபெற்றது. திருமணத்தன்று சிவா தயங்கியபடி யாழினியிடம் கூறினான். அப்பா இறந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள்,அம்மா எங்கள் கண்ணெதிரே இவ்வாறு செய்தது எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. பிள்ளைகளாகிய எங்கள் மூவரையும் நினைத்துப் பார்க்காமல் எங்கள் அம்மா தவறான முடிவெடுத்துவிட்டார். "எனக்காக நீ!உனக்காக நான்! "என்று வாழ்வதைவிட ஏதோ ஒரு சூழ்நிலையில் நான் மரணிக்க நேர்ந்தால், நீ நம் குழந்தைகளுக்காக வாழ வேண்டும்.அதேபோல் நீ மரணித்தாலும் நம் குழந்தைகளுக்காக நான் வாழ்வேன் என்று உறுதியாக கூறினான் சிவா!. அதை ஆமோதிப்பதாக தலையாட்டினாள் யாழினி !!!!!
சிறுகதைகள் மற்றும் தொடக்கக் கல்வி சம்பந்தமான பதிவுகளைக் காணலாம்....
excellent story
ReplyDeleteReally nice good concept
ReplyDeleteSuper
ReplyDeleteFantastic. Congrats.
ReplyDeleteSuper❤️
ReplyDeleteமுடிவு சிறந்தது
ReplyDeleteGood narration
ReplyDeleteAwesome... good message ...
ReplyDelete